அன்புடன் வரவேற்கின்றேன் நண்பனாக‌

அன்புடன் வரவேற்கின்றேன் நண்பனாக‌

Friday, September 5, 2014

முதன்முதலில் மழலையர் பள்ளிக்கு சென்ற‌ பொழுது

(நான் முதன்முதலில் மழலையர் பள்ளிக்கு சென்ற‌ பொழுது என் தந்தை எழுதிய‌ கவிதை::::;;)

செப்டம்பர் 1 : எனது மகன் முதலில் பள்ளியில் சேர்ந்த‌ நாள் :::
(மழலைப் பள்ளியில்)

வீட்டினில் பட்டாம்பூச்சியாய்
புன்னகைப் பூவாய்
சுட்டி தனங்களோடு
குட்டி ராஜாவாய்
உறவுகளோடு கும்மாளமிட்டு
வலம் வந்து திரிந்த‌
எனது மகன்
உலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள‌
ஒரு மாணவனாய்
முதன்முதலில் பள்ளியில்
சேர்ந்து விட்டான்.

அவனை பள்ளியில்
விடும் போது
அவன் கத்திய‌ அழுகுரலில்
"அப்பா ஏனப்பா அதுக்குள்
என்னையும் புஸ்தக‌ சுமையினை
சுமந்திட‌ அதற்குள்
தயாராக்குகின்றாய்" என்று
கேட்பது போல்
உள்ளது என்னிடம்................

No comments:

Post a Comment